விஜய் எனக்கு போட்டின்னு சொன்னா எனக்கு மரியாதை இல்லை – ரஜினிகாந்த் ஆவேசம்!
Author: Rajesh27 January 2024, 10:04 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருவண்ணாம மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் ரோலில் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் சொன்ன அந்த காக்கா கழுகு கதை விஜய்க்கு தான் கூறுகிறார் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் அது குறித்து தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். “ரொம்ப வருத்தமா இருக்கு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன அந்த காக்கா கழுகு கதையை அப்படியே வேற மாதிரி.. நான் விஜய்க்கு சொன்ன மாதிரி சோசியல் மீடியால இம்பேக்ட் பண்ணாங்க அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
விஜய் எனக்கு போட்டின்னு சொன்னா எனக்கு மரியாதை இல்லை, எனக்கு கௌரவம் இல்லை. அதேபோல அவருக்கும் அது மரியாதை இல்லை. தயவுசெஞ்சு காக்கா கழுதை கதையெல்லாம் விடுங்க…ரெண்டு பேரின் ரசிகர்களும் இதுபோல் பண்ணாதீங்க.. இது என் அன்பான வேண்டுகோள் ரொம்ப நன்றி” என ரஜினிகாந்த் விளக்கத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.