தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.
முன்னதாக, ரஜினிகாந்த் கமலஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். இவர் கமர்சியல் படங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைகளை வைத்து படம் இயக்கி வந்த கே பாலச்சந்தருக்கு அவருடைய எண்பதாவது வயதில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பணகஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு சென்றுள்ளார்.
இதை பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு இப்படி ஒரு விஷயம் நடக்கிறது உங்களுடைய குருநாதர் கஷ்டத்தில் இருக்கிறார் என ரஜினியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக, ரஜினிகாந்த் தனது குருநாதருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் கே பாலச்சந்தரின் தயாரிப்பில் குசேலன் திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். இது கே பாலச்சந்தருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாம். இப்படிப்பட்ட மனிதன் ரஜினிகாந்த். அவருக்குள் இருக்கும் குரு பக்தி, இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலம் காலமாக நிலைத்து நிற்பவர் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.