மகளுக்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு பாட்ஷாவாக மாறிய ரஜினி.. லீக்கான மாஸ் அப்டேட் இதோ

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 2:00 pm

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, ரோபோ சங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அனுபமா பரமேஸ்வரனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் முஸ்லீம் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக பாட்ஷா படத்தில் முஸ்லீமாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின், தற்போது 28 ஆண்டுகளுக்கு பின், லால் சலாம் படத்திற்காக அவர் முஸ்லீம் வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 652

    6

    5