சம்பளத்தில் விஜய்யை முந்திய ரஜினி… கூலி படத்துக்காக இத்தனை கோடி கூலியா?
Author: Udayachandran RadhaKrishnan25 October 2024, 12:52 pm
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் ரஜினி. பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து வசூல் சக்ரவர்த்தியாக ஜொலித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து நடிகர்கள் கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பட்டியல் ஏராளம். ஆனால் ரஜினி படத்துக்கு தனி மவுசு உண்டு.
தற்போது விஜய் கடைசி படம் கூறி நடித்து வரும் தளபதி 69 படத்துக்காக ₹275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: அந்த படத்துக்காக கெட்டு போனதை சாப்பிட்டேன்… பிரபல நடிகர் உருக்கம்..!
ஆனால் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி ₹280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ஏராளமான நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், படத்துக்கு ரஜினி ₹280 கோடி வாங்குவதாக வந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.