அவர் தூக்கியடிச்சா 30 அடி பறக்கும்… நான் செஞ்சா ஏத்துக்கவே மாட்டாங்க – ரஜினியே பொறாமைப்படும் ஒரு நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தற்போது ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த என் டி ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து பெருமையாக அதே நேரத்தில் லைட்டா கொஞ்சம் பொறாமையோடு பேசியுள்ளது. அதாவது, நடிகர் பாலகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகர்,
கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார்.

சண்டை காட்சிகளில் அவர் ஜீப்பை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும். அதையே நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என கூறினார்.

Ramya Shree

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

8 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

9 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

10 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

11 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

12 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

12 hours ago

This website uses cookies.