கூலி திரைப்படத்தின் 2-வது ஹீரோயின் இவங்களா…! லோகேஷின் தரமான சம்பவம் லோடிங்..!

Author: Selvan
4 December 2024, 6:26 pm

கூலி படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருகிறது.

Lokesh Kanagaraj Rajini Kooli

இப்படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா,கன்னட நடிகர் உபேந்திரா,மலையாள நடிகர் சௌபின் சாகிர்,பாலிவுட் நடிகர் அமீர் கான் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.தற்போது இன்னொரு நடிகையும் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்க: பவர் ஸ்டாருக்கு வந்த பரிதாப நிலை..திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

அவர் வேறு யாருமில்லை பிகில் திரைப்படத்தில் முகத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த ரெபா மோனிகா ஜான் தான்,சமீபத்தில் “மழையில் நனைகிறேன்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த போது அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

Reba Monica John Kooli

விக்ரம் திரைப்படத்தில் வந்த ஏஜென்ட் டீனா மாதிரி இவருக்கு ஒரு வெயிட் ஆன ரோல் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமறையொட்டி பான் இந்திய அளவில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?