ரஜினியின் கைகூடா காதலுக்கு மின்சாரவாரியம் தான் காரணமாம்?.. இது என்னடா புது புரளியா இருக்கு..!

Author: Vignesh
17 April 2023, 3:31 pm

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

bayilvan-ranganathan-updatenews360

பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் வெகு வருடங்களாக இருந்து வருகிறார். அதன் பிறகு சினிமா மூலமாக பத்திரிக்கையாளராக கூறி வருகிறார். பல்வேறு நடிகர்களை பற்றி கிசுகிசுக்களை கூறியும் வருகிறார். அந்த வகையில், மூத்த, நட்சத்திர நடிகர்களை பற்றி கூட அண்மையில் ஒரு கிசுகிசுவை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

rajini - updatenews360

அதாவது, நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த சமயம் ரஜினி இவரை காதலித்து வந்ததாகவும், காதல் முற்றி, ஸ்ரீதேவி அம்மாவிடம் சென்று ரஜினி பெண் கேட்டதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

rajini - updatenews360

அப்போது பதறிப்போன ஸ்ரீதேவி அம்மா, தன் மகள் இப்போது தான் ஓர் நல்ல நிலைக்கு வந்துள்ளதாக கூறி, இப்போதைக்கு தன் மகள் ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்யும் எண்ணம் இப்போது தனக்கு இல்லை என ரஜினியிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனை ஸ்ரீதேவி அம்மா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் ஓர் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

rajini sridevi-updatenews360

தற்போது ஸ்ரீதேவி குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, ஸ்ரீதேவியை பெண் கேட்பதற்கு ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றதாகவும், அவருடன் பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவும் சென்றாராம். அந்த சமயத்தில், ரஜினிகாந்த் தன்னுடைய காதலை ஸ்ரீதேவியிடம் சொல்ல சென்றபோது, அந்த நேரம் மின்சார இணைப்பு துண்டிக்க பட்டதாம் இதனால் அபசகுனமாக என்னிய ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்வதை குறித்து பேசாமல் இருந்துவிட்டதாக தற்போது செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 416

    0

    0