1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் ஆச்சி என்கிற மனோரமா. இவர் நடிகையை தாண்டி நல்ல மனம் கொண்டு புகழ்பெற்றவர். இருந்தபோதிலும், மனோரமா வாழ்க்கையில் சில சறுக்கல்கள் ஏற்பட காரணம் ஒரு அரசியல் மேடை தான்.
ரஜினிகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்த மனோரமா ரஜினிகாந்தை பார்த்து இதுவரை யாரும் பேச முடியாத அளவிற்கு படுமோசமான வார்த்தைகளை பேசி விமர்சித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பின் ஆறு மாதங்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளார். அப்போதுதான் மனோரமாவிற்கு அருணாச்சலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ஆனால், படப்பிடிப்பு முடியும் வரை குற்ற உணர்ச்சியில் இருந்த மனோரமா ரஜினியை நேருக்கு நேர் பார்க்காமல் இருந்து தவிர்த்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ரஜினிகாந்த் இது பற்றி மனோரமாவை பதிலுக்கு பதில் எங்கும் விமர்சித்து பேசியதில்லை என்றும், அப்படி மனோரமாவின் கலை உலக பொன்விழாவிற்கு ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்திக்காமல் போனில் சொன்னதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ரஜினிகாந்த் என்றும், அப்போது பேசுகையில், ரஜினிகாந்த் மேடையில் பில்லா பட சம்பவம் ஒன்றை பேசி இருந்தார்.
அதாவது, 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த திரைப்படம் “பில்லா”.இத்திரைப்படம் ஹிந்தியில், அமிதாப் பச்சான் நடித்த “டான்” திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். ரஜினி நடித்த “பில்லா” திரைப்படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார்.
சுரேஷ் பாலாஜி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மனோரமாவை பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், “பில்லா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.
பில்லா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது அங்கே படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர், ரஜினியை குறிப்பிட்டு “பரவாயில்லையே, பைத்தியம் நல்லா டான்ஸ் ஆடுதே” என கேலி செய்திருக்கிறார்
ரஜினிகாந்த் அந்த காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து இவ்வாறு ஒரு நபர் கூறியவுடன், அங்கிருந்த மனோரமா, அந்த நபரை அழைத்து அவரது சட்டையை பிடித்து அடித்தாராம். “யாரடா பைத்தியம்ன்னு சொன்ன, அந்த தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடிட்டு இருக்காரு” என கண்டபடி திட்டினாராம்.
மேலும் அந்த நபரை “இந்த இடத்தை விட்டு வெளியில் அனுப்பினால்தான் இங்கே ஷுட்டிங் நடக்கும்” என கூறினாராம் மனோரமா. அந்த நபரை படக்குழுவினர் வெளியே துரத்தி அனுப்பிவிட்டனர். அந்த நபர் போன பிறகுதான் நடிக்கவே தொடங்கினாராம் மனோரமா.
இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ரஜினிகாந்த், “ஒருவாட்டி அரவணைச்ச கை, நீங்க ஆயிரம்வாட்டி அடிச்சா கூட ஏத்துப்பேன்” என மிகவும் உணர்ச்சிப்பொங்க பேசினார். மேடையில் அமர்ந்துகொண்டிருந்த மனோரமா ரஜினியின் பேச்சை கேட்டு பூரித்துப்போனார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.