ரஜினியோட தொல்லையா இருக்கு.. வீட்டின் முன் கடுப்பில் கொந்தளித்த மூதாட்டி..!(வீடியோ)

Author: Vignesh
16 January 2024, 10:12 am

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

rajini

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

rajini

இந்நிலையில், ரசிகர்கள் ரஜினியிடம் பண்டிகை நாட்களில் வாழ்த்து பெறுவதற்காக ரஜினி வீட்டு வாசலில் காத்து கிடப்பது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ரஜினி வெளியே வரவேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கத்தி கூச்சல் போடுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில், ரஜினி வீட்டின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஒருவர் வெளியில் வந்து ரஜினி ரசிகர்களிடம் அதிர்ச்சியாக பேசியுள்ளார். அதாவது, எல்லா பண்டிகைக்கும் வந்து சத்தம் போடுறீங்க.. நல்ல நாளில் கூட நிம்மதியா இருக்க முடியல, என சொல்லி திட்டிவிட்டு சென்று இருக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…