வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையால் மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.
நல்ல உயரம், தோற்றம் என கம்பீரமாக இருந்த ரகுவரனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படம் மாபெரும் ஹிட் அடித்து யார் இந்த நடிப்பு அரக்கன் என உலகம் முழுக்க உள்ள ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறான். அதன் பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துபிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம்.
அந்த நேரங்களில் சரியாக படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு முறை சிக்கனலில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்து, இது தன் மகனோ? தான் மனைவியையும் மகனையும் விட்டுசென்றதால் தான் இந்த நிலைக்கு வந்திட்டேனோ? என்றெல்லாம் பயந்து போன் பண்ணி விசாரித்தாராம். அந்த அளவிற்கு தனிமை அவரை மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு நலிவிழந்து 2008ம் ஆண்டு மறைந்துவிட்டார்.
இந்நிலையில் ரகுவரனின் இறுதி சடங்கில் ரஜினி பங்கேறக்கவில்லை என்றும் அதற்கான உப்பு சப்பில்லாத காரணம் ஒன்றையும் கூறியதாக அன்றைய பத்திரிகைகள் ரஜினியை விமர்சித்து செய்தி வெளியிட்டது. அதாவது, தமிழ் சினிமாவின் மகா கலைஞன், மிரட்டலான வில்லன், ரஜினியின் நெருங்கிய நண்பன் ரகுவரன் அப்படி இருந்தும் ரஜினி அவரது இறுதி சடங்கில் கலந்துக்கொள்ளாதது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
அதன் பின்னர், ரகுவரன் அம்மா, ரஜினியை யாரும் குறை சொல்லவேண்டாம். உண்மையில் என்ன நடந்ததென்றால், ரகுவரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது அவருடனேயே ரஜினிகாந்த் நீண்ட நேரம் மருத்துவமனையில் இருந்தார். ரகுவரன் திடீரென இறந்துவிட்டதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நண்பனை, மகா கலைஞனை தன்னால் பிணமாக பார்க்கவே முடியாது என்ற காரணத்தால் தான் ரஜினி பங்கேற்கவில்லை என ரகுவரனின் தாயார் பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரஜினியை செய்தது தவறு என அனைவரும் கூறியுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.