த.வெ.க மாநாட்டை வீழ்த்த களமிறங்கும் ரஜினி.. சம்பவம் செய்யும் ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 4:11 pm

நாளை ஞாயிற்றுக்கிழமை விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக முழு வீச்சில் 90% பணிகள் நடந்து முடிந்துள்ளன.

கூட்டம் அதிகரிக்கும் என்பதால் முன்கூட்டியே மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி என மும்முரமாக பணிகள் நடந்து முடிந்துள்ளன.

விஜய் நாளை அரசியல் குறித்து என்ன பேசப் போகிறார், கட்சியின் கொள்ளை, நிலைப்பாடு என்ன என்பதை நேரடியாக பார்க்கவும், கேட்கவும் ரசிகர்கள் மக்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் தவெக மாநாட்டை பார்க்க கூடாது என்பதற்காகவே மக்களை திசைதிருப்ப சன்டிவியில் நாளை மாலை 6 மணிக்கு ஜெயிலர் படம் ஒளிபரப்பாகிறது.

ஏற்கனவே X தளத்தில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டு வரும் நிலையில், இதை வாய்ப்பாக பயன்படுத்தி டிஆர்பியை ஏற்ற முயற்சிக்கிறது அந்த சேனல். இதை ப்ளு சட்டை மாறன் தனது X தளத்தில், யாருக்கு உங்க ஓட்டு மாநாடுக்கா? ஜெயிலருக்கா? என ஒரு பிரச்சாரமே நடத்தி வருகிறார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!