மகான் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி..! மகிழ்ச்சியில் படக்குழு.. !

Author: Rajesh
11 February 2022, 1:52 pm

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் விக்ரம். ஆக்ஷன் திரில்லர் கலந்தப் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நான்கு விதமான காலகட்டங்களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாரயணன் இசையத்துள்ள மேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்துவிட்டு, மிகவும் அருமையாக இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ஃபோனில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ”சிறந்த திரைப்படம்… சிறப்பான நடிப்பு…. புத்திசாலித்தனமான திரைக்கதை’ என ‘மகான்’ படத்தை தலைவர் பாராட்டி இருக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும், உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா….. உங்கள் பாராட்டால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…