ரஜினி இப்படிப்பட்டவரா? கால்மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கிறாங்க.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!
Author: Vignesh2 January 2024, 4:40 pm
கடந்த ஆண்டு லியோ படம் குறித்தும் விஜய் பற்றியும் பேசிய பிறகு வைரலாக பேசப்பட்டு வருபவர் மீசை ராஜேந்திரன். இவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு நெருக்கமான நபர்களில் ஒருவர். அவருடைய தீவிர ரசிகரும் ஆவார்.

இவர் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். இதில், சிவாஜி படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சாரிடம் பேசிய போது, விஜயகாந்த் குறித்து அக்கறையாக விசாரித்தார். கேப்டன் எப்படி இருக்கிறார் நலமா என கேட்டார்.

அப்போது, அவர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. அதனால், படப்பிடிப்பில் சிகரெட் பிடித்துக் கொண்டு என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பக்கம் சிவாஜி படத்தின் இயக்குனர் சங்கர் வந்தார். இயக்குனர் சங்கரை பார்த்தவுடன் கையிலிருந்த சிகரட்டை கீழே போட்டு விட்டார்.

ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் இயக்குனருக்கு தரும் மரியாதையை நான் அங்கு தான் பார்த்தேன். இப்போது, இருக்கும் சில நடிகர்கள் இயக்குனர் முன் கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கிறாங்க. ஆனால், ஒரு இயக்குனருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஷங்கரை பார்த்தவுடன் சிகரெட்டை கீழே போட்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்துள்ளார்.