அம்பானியின் பல கோடி ஆஃபர் ‘நோ’ சொன்ன ரஜினி..! ஓ இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Author: Vignesh
10 January 2023, 2:00 pm

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

jailer - updatenews360

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் தனது மகளின் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார். ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க கூடாது என்று ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டாராம்.

lal salaam -updatenews360

சில ஆண்டுகளுக்கு முன் உலகின் டாப் 10 பணக்கார்களில் ஒருவரான அம்பானி சூப்பர் ஸ்டார் ரஜினியை தன்னுடைய கம்பெனி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்காக பல கோடி சம்பளமாக கொடுக்க தயாராக இருந்தாராம். ஆனால், அந்த பல கோடி ஆஃபரை வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.

rajini updatenews360

இனி நம்முடைய நட்பு தொடர வேண்டும் என்றால், விளம்பரத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்காதீர்கள் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டாராம்.

குளிர்பான விளம்பரத்தை தவிர்த்து இன்று வரை அவர் எந்த விளம்பரங்களின் மூலமும் சம்பாதித்தது இல்லை.

Rajini - updatenews350.jpg 2

தன்னால் எந்த ஒரு விஷயமும் மக்களுக்கு தவறாக ப்ரொமோட் ஆகி விடக்கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் அவர் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 448

    3

    0