சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், நம்பர் ஒன் ஹீரோவாகவும் பார்க்கப்படுபவர். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ள இவரின், பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 169வது திரைப்படமான ஜெயிலர் படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் பெரும்பாலும் கமர்சியல் படங்களில் அதிகமாக தேர்ந்தெடுத்த நடிப்பார். மேலும், சர்ச்சைக்குரிய கதைகளில் நடிக்க தயங்குவார். இதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால் தன்னால் பணம் சம்பாதிக்கப்பட்ட கலைஞர்களோ தயாரிப்பாளர்களோ பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணம் தான்.
ரஜினிகாந்த் பாட்ஷா படத்திலிருந்து தான் கொஞ்சம் அதிரடி ஆக்சன் பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ஒவ்வொரு படத்திலும் ரஜினி என்ன டயலாக் சொல்வார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். நான் ஒரு தடவை சொன்னால் 100 தடவை சொன்ன மாதிரி, என் வழி தனி வழி போன்ற வசனங்கள் எல்லாம் இப்படி பிரபலமானவை தான்.
மேலும், அருணாச்சலம், முத்து, படையப்பா போன்ற படங்களில் ரஜினி கொஞ்சம் அரசியல் பேசவும் ஆரம்பித்தார். அதிலும் முத்து மற்றும் படையப்பா படம் முழுக்க அரசியல் வசனங்கள் தான் இடம் பெற்றிருக்கும். முத்து படத்தில் வரும் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்ற வசனத்தின் மூலம் அரசியலுக்கு வருவதை கூட ரஜினி உறுதி செய்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இப்படி பல அரசியல் வசனங்களை தைரியமாக பேசிய ரஜினி ஒரு குறிப்பிட்ட வசனத்தை பேசவே மாட்டேன் என்று மிகவும் அடம் பிடித்து உள்ளார். அதாவது, ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் தான் அந்த வசனம் இடம் பெற்று இருந்தது. அந்த சூரியன் கூட என்னைக் கேட்டால் தான் எழும், விழும் என்று சொல்ல வேண்டுமாம். இந்த வசனத்தை கேட்டவுடன் இது வேறொரு அரசியல் கட்சியின் சின்னத்தை குறிப்பது போல் உள்ளது. நான் பேசவே மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் ரஜினி.
நடிகர் ரமேஷ் கண்ணா ரஜினிகாந்தை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அவர் பேசவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். கிட்டத்தட்ட ஒன்றை மணிநேர சமாதானத்திற்கு பிறகும் ரஜினி ஒப்புக் கொள்ளாததால், அந்த வசனம் அந்த காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், படையப்பா படத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் பல வசனங்களை பேசிய ரஜினிகாந்த் இந்த படத்தின் போது சூரியனுக்கு எதிரான வசனத்தை பேச மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். மேலும், இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் நீங்கள் ஏற்கனவே முத்து படத்தில் கொடுத்த வசனங்களால் தான் என் மீது அரசியல் எதிர்பார்ப்பு அதிகமானது. இனி இது போன்ற வசனங்கள் வேண்டாம் என்று கண்டிஷன் போட்டு விட்டாராம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.