தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தற்போது ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை தயாரிக்க பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரஜினியின் சம்பளத்தை பேசியது. ஆனால், ரஜினி எனக்கு ரூ. 115 கோடி போதும் ஆனால் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கணும். எனக்கு பாட்சா வெற்றி போல் இந்த படம் அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதெற்கெல்லாம் சம்மதித்து ரஜினிக்கு அவர் கேட்டதை விட கூடுதலாக சம்பளத்துடன் ஒப்புக்கொண்டுள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.