தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அவ்வப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வெளிவரும் சர்ச்சைகளால் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் கூட பலருக்கும், தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில், யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் ஈசியாக ரஜினிகாந்து இப்படிப்பட்டவர் தான் என்று கூறி விடுகிறார்கள். இந்த நிலையில், ரஜினிகாந்த் தங்களது குடும்பத்திற்கு செய்த மாபெரும் உதவியை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில், தற்போது கூறியுள்ளார்.
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் லிவிங்ஸ்டன் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரங்களில் கூட அவர் நடித்துள்ளார். சமீபத்தில், லால் சலாம் படத்தில் கூட ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். லிவிங்ஸ்டன் மனைவி மாரடைப்பால் உயிருக்கு போராடியுள்ளார். இந்த சமயத்தில், அவரது பிள்ளைகள் இருவரும் வேதனையில் இருந்துள்ளனர். கையில், பணம் இல்லை என்ன செய்வது என்ற மனக்கஷ்டத்தில் குடும்பமே இருந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனடியாக நடிகர் லிவிங்ஸ்டனை சந்தித்து 15 லட்சம் ரூபாயை கொடுத்து உடனடியாக உங்கள் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
முதலில், பணத்தை வாங்க தயங்கிய லிவிங்ஸ்டனிடம் உங்களை என்னுடைய சகோதரனாக பார்க்கிறேன் என ரஜினிகாந்த் கூறிய பிறகு அந்த பணத்தை லிவிங்ஸ்டன் வாங்கி மனைவியின் உயிரை காப்பாற்றியுள்ளார். இது மட்டும் இன்றி இன்னும் பணம் வேண்டுமானாலும், கேளுங்கள் தருகிறேன் என கூறினாராம் ரஜினி. இன்று தனது மனைவி உயிரோடு இருக்க ரஜினிகாந்த் தான் காரணம். அவருடைய போட்டோவை எங்களுடைய வீட்டின் பூஜையறையில் இருக்கிறது என நடிகர் லிவிங்ஸ்டன் அந்த பேட்டியில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
This website uses cookies.