ரஜினியிடம் தெனாவட்டா பேசிய நெல்சன்… ஜெயிலர் கதை சொல்ல அவ்ளோவ் சீன் போட்டாராம்!
Author: Shree29 ஜூலை 2023, 10:15 காலை
தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு நடந்தது. இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.
அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் மரியாதையோடு வரவேற்பு கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். அதே நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வரவேற்கப்பட்டார்.
ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது அங்கு யாரும் அவர்களை கண்டுகொள்ளவிலை. இதனால் மிகவும் அசிங்கப்பட்டு தலைகுனிந்தபடி சென்றுள்ள வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து “ஜெயிலர் படம் வெளியாகட்டும்” பாடம் புகட்டுவோம் என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். இந்த சம்பவம் ரஜினி காதுக்கு செல்ல… ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் விசிட் அடித்திருக்கிறார்.
அப்போது நெல்சனை அருகில் அமரவைத்து. விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை பூஸ்ட் செய்திருக்கிறார். பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவையே உற்சாகப்படுத்திவிட்டு சென்றதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது பேசிய ரஜினிகாந்த், டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றி பார்த்து நெல்சனை கதை ரெடி பண சொன்னேன். அவர் அந்த சமயத்தில் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது கதை சொல்ல 10 மணிக்கு வீட்டிற்கு வரசொல்லியிருந்தேன். ஆனால் அவர் காலதாமதமாக 12 மணிக்கு தான் வந்தார். வந்து அமர்ந்ததும் ஒரு நல்ல காபி கொடுங்க என கேட்டார். குடிச்சிட்டு கதையின் ஒன் லைன் மட்டும் தான் சொன்னார். கதை பிடித்ததால் விரிவாக கதையை சொல்ல சொன்னேன். ஒன் லைன் கேட்டுவிட்டு முழு கதை சொல்ல சொன்னேன்.
அதற்கு நெல்சன்…. இன்னும் ‘பீஸ்ட்’, படத்தின் படபிடிப்பு 10 நாட்கள் உள்ளது. அதை முடிச்சிட்டு வந்து கதை சொல்கிறேன் என்றார். பின்னர் பீஸ்ட் படம் முடித்துவிட்டு தான் கதை சொன்னார். அதன்பிறகு அறிவிப்புகள் வெளியானது என ரஜினி மேடையில் பேசினார். நெல்சன் சூப்பர் ஸ்டாரிடமே இவ்வளவு திமிராக நடந்துக்கொண்டிருக்கிறாரே? அதற்கெல்லாம் காரணம் விஜய்யை வைத்து படமெடுக்கிறேன் என்ற மிதப்பில் தான் இப்படி பந்தா காட்டியிருக்கிறார் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
0
0