பொதுவெளியில் இப்படியா..? ஐஸ்வர்யா ராயால் அசிங்கப்பட்ட ரஜினி ; மெச்சும் ரசிகர்கள்

Author: Babu Lakshmanan
10 February 2023, 6:37 pm

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்பச்சன் நடித்திருந்தனர். இந்தப்பட்டம் பட்டி தொட்டியெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று, சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட விமர்சனங்களையும் வெளிப்படையாக சொல்லி, தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதாவது :- பெங்களூரூவில் அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்த போது, அருகே வசித்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், எங்களின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, 60 வயதுக்கும் மேலான நந்துலால் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ஹே ரஜினி, உன் தலைமுடிக்கு என்னாச்சு என்று கேட்டார். கொட்டிடுச்சு, அதை மறந்துவிடுவோமே என நான் பதில் அளித்தேன்.

ரிடையராகி ஜாலியாக இருக்கிறீர்களா என்று அவர் கேட்டார். உடனே நான், எந்திரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஐஸ்வர்யா ராய் தான் ஹீரோயின் என்றேன். சரி, ஹீரோ யார் என்று அவர் கேட்டார். நான்தான் ஹீரோ என்று கூறினேன். என்னது நீயா என்றார். அப்பொழுது அவருடன் அவரின் குழந்தைகளும் இருந்தார்கள். அவர்களோ, அப்பா அவர் தான் ஹீரோவாம், என்றனர். இதையடுத்து 10 நிமிடம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பிறகு கிளம்பிச் சென்றுவிட்டார், என ரஜினி கூறினார்.

வீட்டுக்கு வெளியே தனது பிள்ளைகளிடம் பேசிய நந்துலால், ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு. ஐஸ்வர்யாவை விடுங்க அபிஷேக் பச்சனுக்கு என்னாச்சு. சரி அவரையும் விடுங்க, இந்த அமிதாப் பச்சனுக்கு தான் என்னாச்சு. ரஜினிக்கு போய் ஐஸ்வர்யா ராய் ஹீரோயின் என பேசியது எனது காதுக்கு கேட்டது, எனக் கூறினார் ரஜினி.

திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து வரும் ரஜினிகாந்த், பொது இடத்தில் இப்படி, தன்னைத் தானே கலாய்த்து கொள்வது, இவரை தவிர வேறு யாருக்கும் வராது என்று ரசிகர்கள் மெச்சிக் கொண்டனர்.

மேலும், முடி கொட்டினாலும் விக் வைக்காமல் வெளியே வரும் தைரியமான ஹீரோ நீங்கள். உங்களை போன்று வேறு யாரும் இருக்க முடியாது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 853

    14

    2