பண்ணது போதும்.. இனி உன் பேச்சைக் கேட்க முடியாது.. ஆடியோ லாஞ்சில் மகளுக்கு ரிவிட் அடித்த ரஜினி..!

Author: Vignesh
8 August 2023, 4:15 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajinikanth

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லன்ச் விழா நடைபெற்றது.

அந்த விழாவில், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றி பேசினார். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான் என்றும், தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை ரசிகர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் எந்திரன் படத்தை அடுத்து தனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட சமயத்தில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததாகவும், மருத்துவர் தன்னிடம் நீங்கள் உங்களுக்கு பிடித்ததில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்.

rajini - updatenews360

தனக்கு நடிப்புத் தவிர வேறு எதுவும் தெரியாது அதனால், படங்களின் நடிக்க ஆசை வந்தது அந்த சமயத்தில், தன் மகள் அதி புத்திசாலி அவர் தன்னிடம் வந்து அனிமேஷன் படத்தில் நடியுங்கள் என்று ஆலோசனை கொடுத்தார்.

rajini - updatenews360

அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை படத்தில் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொன்னார்கள் எனக்கு அந்த படம் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.

rajini - updatenews360

அதனால், எடுத்தவரை போதும் படத்தை அப்படியே திரையரங்குகளில் ரிலீஸ் பண்ணுங்கள் என கூறிவிட்டேன். திரைப்படம் வெளியானது தான் நினைத்தபடி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் தனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலி கூட பழக்க கூடாது. அவர்களின் ஆலோசனையை கேட்கக் கூடாது என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிக அளவில் வைரலாக்கி வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1363

    14

    3