80 முதற்கொண்டு தற்போது வரை சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பும், ஸ்டெயிலுக்கும் மயங்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் வெளியான அண்ணாத்த கலவையான விமர்சனங்களை கொண்டிருந்தாலும், வசூலை அள்ளி விட்டது.
தற்போது, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் கவுரவ தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார். அதோடு, இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில், 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான ரஜினியின் அருணாச்சலம் படம் குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரகுவரன், ரம்பா, சௌந்தர்யா என பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார்.
‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ எனும் டயலாக் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம், திரையரங்கில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை இந்தப் படத்தின் மூலம் ஒட்டு மொத்தமாக 32 கோடிக்கு மேல் வசூலானதாக சொல்லப்படுகிறது.
மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்திற்கு முதலில் குபேரன் என்று தான் சுந்தர் சி பெயர் வைத்துள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக படத்தின் டைட்டில் வெளியே கசிந்து விட்டால், வேறு தலைப்பை வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சுந்தர் சியை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், படத்திற்கு நல்ல தலைப்பை தேர்வு செய்து வைத்துள்ளேன் எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, ரஜினியை சந்திக்க நேரில் சென்ற சுந்தர் சியிடம் ரஜினியின் நண்பர் ஒருவர், படத்திற்கு சூப்பர் டைட்டில் சார் என்று கூறினார். இதனைக் கேட்டு, என்ன டைட்டில் எனக் கேட்ட சுந்தர் சியிடம், அருணாச்சலம் என்று சொல்லியுள்ளார். உடனே அவர், என்ன ‘அருணாச்சலம், வேதாச்சலம்,’ நல்லாவே இல்லை என்று சொல்லி ரஜினியை சந்தித்துள்ளார்.
அப்போது, ரஜினியும் இதே டைட்டிலை சொல்லியுள்ளார். அதுவும் அவருடைய ஸ்டெயிலில் சொன்னவுடன் சுந்தர் சிக்கு டைட்டில் மிகவும் பிடித்து விட்டது. உடனே செய்தியாளர்களை சந்தித்து படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்களாம்.
அண்ணாமலை படம் வெளியாகி நேற்றோடு 26 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
This website uses cookies.