நீலாம்பரி முன் படையப்பா மானம் போச்சு… அந்த காட்சியில் 8 டேக் – அசிங்கப்பட்ட ரஜினிகாந்த்!

Author: Shree
29 July 2023, 1:55 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லன்ச் விழா நடைபெற்றது.

அந்த விழாவில், ரஜினிகாந்த் ஜெயிலர் படம் குறித்தும், நெல்சன் குறித்தும் பல விஷயங்களை பேசினார். மேலும், குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றி பேசினார். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.Hukum பாடலில் இருந்து சூப்பர்ஸ்டார் என்பதை மட்டும் எடுக்க சொன்னேன் என ரஜினி பேசிக்கொண்டிருந்தபோதே ரம்யா கிருஷ்ணன் திடீரென மேடைக்கு வந்து மைக் வாங்கி “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்… கூடவே பொறந்தது எங்கேயும் போகாது” என பேச அந்த அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

இதனை கேட்டு ஒரு செகண்டல நீலாம்பரியே வந்துட்டாங்க என ரசிகர்கள் கூறினார்கள். அதன் பின்னர் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், 24 வருஷத்திற்கு பின்னர் ரம்யா கிருஷ்ணனுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் ஒரு காட்சியில் ” ரம்யா கிருஷ்ணனிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு பக்கத்தில் இருக்கும் மருமகளிடம் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கனும் அது எனக்கு உடனே வரவில்லை.

jailer

அந்த காட்சியில் நடிக்க நான் கிட்டத்தட்ட 8 டேக் எடுத்தேன். நீலாம்பரி முன்னாலே இந்த படையப்பா மானமே போச்சு என்று நான் அங்கிருந்தவர்களிடம் சொல்லி சிரிச்சிச்சேன் என அதனை மேடையில் கூறினார். ஒரு சூப்பர் ஸ்டார் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இப்படி உண்மையை வெளிப்படையா சொல்லுறாரே என எல்லோரும் வியந்து ரஜினியை பாராட்டி வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ