தனுஷ் கெஞ்சி கேட்டார்…. நான் பண்ணல -ரகசியத்தை போட்டுடைத்த ரஜினிகாந்த்!

Author: Rajesh
13 February 2024, 1:38 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார்.

கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் ஆடியோ லான்ச்சில் தனுஷ் குறித்து பேசிய ரஜினிகாந்த், என் இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் திரைப்படத்தில் நடித்தபோது அவள் ஆக்ஷன் என்று சொன்னால் நான் நடிக்கவே மாட்டேன். காரணம் பாலசந்தர் சார், முத்துராமன் சார், சுரேஷ் கிருஷ்ணா , ஷங்கர் , மணிரத்தினம் போன்ற பெரிய பெரிய இயக்குனர் படங்களில் நடித்துவிட்டு சௌந்தர்யா ஆக்ஷன் சொல்லி நான் நடிக்கணும் என்பது ஒரு மாதிரியாக இருந்துச்சு என்றார்.

dhanush - updatenews360

அதே போல் தான் தனுஷ் கூட எனக்காக ஒரு கதையை தயார் பண்ணிட்டு என்கிட்ட வந்து வாய்ப்பு கேட்டார் ஆனால், நான் பண்ணல. இருந்தாலும் அவர் என்னை புரிந்துக்கொண்டார் என ரஜினி அந்த நிகழ்ச்சியில் பேசினார். மகளை விட்டு பிரிந்து சென்ற போதிலும் ரஜினி தன் மருமகனை குறித்து மேடையில் பேசியது அவரது பெருந்தன்மையை உணர்த்துகிறது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். நடிப்பை தாண்டி நல்ல மனிதர் என்பதால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார் என அவரை ஆரவாரம் செய்கிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 334

    0

    0