பிரபல நடிகையின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற உச்ச நடிகர்.. அது மறக்க முடியாத சம்பவம்: உண்மையை உடைத்த பிரபலம்..!
Author: Vignesh23 January 2023, 11:30 am
நடிகை ஹீமா சௌத்ரி 70, 80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். 1976 -ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனால், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலராக இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹீமா சௌத்ரி, பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஆக்ட்டிங் ஸ்கூல் சென்றதாகவும், அப்போது அதில் ரஜினிகாந்தும் மாணவராக இருந்ததாகவும், சில நாட்கள் கழித்து இருவரும் நண்பர்களாக மாறியதாக தெரிவித்தார்.
தனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு இருந்து தான் சென்றுவிட்டதாகவும், ஆனால் ரஜினிகாந்திற்கு அப்போது எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ரஜினி இதனால் அதிக நேரம் தனிமையில் தான் இருப்பார் என்றும், ஒரு நாள் அவருக்கு கே பாலச்சந்தர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சொல்ல நள்ளிரவில் தன் வீட்டிற்கு வந்த ரஜினி தன் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி சென்றதாகவும், இப்பொது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக தான் நடந்து கொள்கிறார்” என பேட்டியில் தெரிவித்திருந்தார்.