மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. ரசிகரின் செயலால் மிரண்டு ஓட்டம் எடுத்த சம்பவம்..!

Author: Vignesh
24 February 2024, 2:19 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ரஜினிகாந்த் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் இதுவரை வெளிவந்து உள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்து தற்போது, தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, திரைப்படத்தை மாறுவேடத்தில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்குக்கு சென்று படம் பார்த்துள்ளார். முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார்.

அந்த சமயத்தில், ஒரு ரசிகர் தலைவா என அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி மாட்டிகிட்டோமே என மிரண்டு போய் பதட்டத்துடன் திரும்பி பார்த்து உள்ளார். ஆனால், ஒரு ரசிகர் தன்னுடைய நண்பர் ஒருவரை தான் தலைவா என அழைத்திருக்கிறார். அதன் பிறகு, ரஜினி வேகமாக ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றுள்ளாராம். இந்த தகவலை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!