சூப்பர் ஸ்டார் சீரியல் பார்க்கிறாரா? எதிர்நீச்சல் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

Author: Shree
27 July 2023, 10:34 am

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஆணவம், அகங்காரம் என பெண்களை அடிக்கு,அடிமைகளாக நடித்தும் ஆண்களை போன்று நடித்துள்ளார்.

இந்த சீரியலின் மாபெரும் வெற்றிக்கு மாரிமுத்து ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் நேரம் பார்த்து காத்திருந்து பார்க்கிறார்களாம்.

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்றும் அவர்களிடம் இருந்து பெண்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதே இந்த தொடரின் கதை. இதில் ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலை பார்த்து வியந்துபோன ரஜினி அந்த தொடரின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த தருணத்தை இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறி நெகிழ்ந்துள்ளார். இதை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் ” என்னாது தலைவர் சீரியல் எல்லாம் பார்க்கிறாரா? என வியந்துவிட்டார்கள். இதோ இயக்குனரின் அந்த பேட்டி வீடியோ:

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 278

    0

    0