ரஜினிகாந்த் செய்த துரோகம் : அவருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்த பிரபல நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 8:16 pm

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், துணை கதாபாத்திரங்கள் என எந்த கேரக்டரில் நடித்தாலும் அதற்கு அப்படியே பொருந்தி ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடிக்கும் திறமை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர்தான் சத்யராஜ். இவர், டாப் ஹீரோக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், காவேரி நீர் பிரச்சனைக்காக தமிழ் நடிகர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். அப்போது மேடையில் பேசிய சத்யராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசியதாக சொல்லப்பட்டது.

ஆனால் இது குறித்து சத்யராஜிடம் கேட்டதற்கு, ‘நான் ரஜினிகாந்தை தாக்கி பேசவில்லை’ என்று கூறினார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, சத்யராஜ்க்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட பிரச்னையை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியும் சத்யராஜும் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த பின், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் படத்தை போட்டு காட்டியுள்ளார். அப்போது படத்தை பார்த்த ரஜினி, ” என்னை காட்டிலும் சத்யராஜ்க்கு தான் பயங்கரமான காட்சிகள் அமைத்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

இத்திரைப்படம் 3 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளதால், படத்தை 2.30 மணி அளவிற்கு குறைத்த இயக்குனர் சத்யராஜ் நடித்திருந்த பல காட்சிகளை நீக்கியுள்ளார்.

இதை அறிந்த சத்யராஜ் ,” ஏன் என்னுடய காட்சிகளை நீக்கிவிட்டீர்கள்? என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர், ” படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்தின் காட்சியை நீக்க முடியாது. நீங்கள் நடித்திருந்த காட்சி சிலவை கதைக்கு தேவையில்லாமல் இருந்தது. அதனால் அதை நீக்கினேன்” என கூறியுள்ளார்.

ஆனால் சத்யராஜ், இதற்கெல்லாம் காரணம் ரஜினிகாந்த் தான் என்று நினைத்து கொண்டாராம். இதனால் தான் சத்யராஜிற்கு ரஜினி மேல் வெறுப்பு உண்டானதாக சொல்லப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ