‘கூலி’ படத்தில் ரஜினிக்கு மகனாகும் பிரபல நடிகர்.. கசிந்தது புகைப்படம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 December 2024, 11:44 am

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த திரைப்படமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே ‘கூலி’ பட நட்சத்திரங்களுடன் ரசிகர்க எடுத்த படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், சுந்தீப் கிஷன், மற்றும் வருண் ஆகியோருடன் கூலித் படத்தின் செட்டில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த படங்களின் மூலம், சுந்தீப் கிஷன் மற்றும் வருண் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. மேலும், சுந்தீப் கிஷனின் லோகேஷ் கனகராஜுடன் 2வது முறையாக இணைந்துள்ளார்.

ஏற்கனவே இயக்குனரின் அறிமுகப் படமான மாநகரம் படத்தல் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

Sundeep Kishan Confirmed in Coolie

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் மற்றும் ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்க: காவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த ஆக்ஷன்-டிராமா 2025 ஆம் ஆண்டு கோடை வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கூலியின், சமூக அநீதி மீதான போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், த்ரில் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி பொங்கும் காட்சிகள் மற்றும் சமூகத்தைத் தொடும் முக்கிய செய்தியுடன் கூடிய இப்படம், ரஜினிகாந்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும என கூறப்படுகிறது.

Coolie Shooting Spot Photos Leaked

அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவை கவனித்து, இப்படத்தைத் உயர் தரத்தில் உருவாக்கி வருகின்றனர்.

தற்போது படப்பிடிப்பு சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்து வருகிறது. அங்கு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. ‘கூலி’ தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வெளியீடாக உருவாக உள்ளது, மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 117

    0

    0