நியூ ஸ்டைலில் கலக்கும் சூப்பர் ஸ்டார்; வேட்டையனை தொடர்ந்து புது அப்டேட்,..

Author: Sudha
5 July 2024, 5:39 pm

இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வேட்டையனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தினை குறித்த அப்டேட் வந்துள்ளது.இது ரஜினியின் 171 வது படம்.ரஜினி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு “கூலி“என பெயரிடப் பட்டுள்ளது.அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இன்று முதல் கூலி பட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது4 நாட்கள் மட்டுமே அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

ஜுலை 10ம் தேதி முதல் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதற்காகசென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் பல முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட இருப்பதாகவும் திரை வட்டாரம் சொல்கிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!