3 பெக் அடிச்சும் கமல்ஹாசனால் போதை ஏறாமல் கடுப்பான தலைவர் : உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்!
Author: Vignesh20 November 2022, 1:00 pm
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஹிட் அடிக்கும் படத்தின் இயக்குனர்களை பாராட்டி சீராட்டி வருவது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் ரஜினிகாந்த் இறங்கி வந்து பாராட்டுபவர் கிடையாது.
ஆனால் தற்போது தனக்கு பிடித்தமான கதையாக அமைந்தால் அவர்களை அழைத்து கண்டியணைத்து பாராட்டி தள்ளி வருகிறார். ஆனால் அந்த காலத்தில் கமல் ஹாசனின் வெற்றியால் ரஜினிகாந்த் பொறாமை படுவார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் அது உண்மையில்லை என்று இயக்குனர் பி வாசு கூறியுள்ளார். ரஜினிகாந்தை வைத்து பல ஹிட் படத்தை கொடுத்த பி வாசு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரஜினியை பற்றி பெரியளவில் பேசியிருக்கிறார்.
அப்போது, கமல் ஹாசன் நடித்த நாயகன் படத்தை போல் நாம் ஒரு படம் செய்யலாம் என்று ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார் பி வாசு. உடனே ரஜினி நாயகன் படம் பார்க்க வேலு நாயக்கர் கதாபாத்திரம் ரஜினியை மிகவும் ஈர்த்ததாம்.
வீட்டுக்கு சென்று 3 பெக் மது குடித்தும் அவர்க்கு போதை ஏறவில்லையாம். அப்படியொரு போதை நாயகன் படத்தின் மீது என்று இதை என்னிடம் கூறினார் என பி வாசு கூறியிருக்கிறார்.