அப்பாவின் பெயரையே மகனுக்கு சூட்டிய மகள்… ரஜினி வீட்டில் விஷேஷம்!

Author: Shree
18 September 2023, 9:55 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010ம் ஆண்டு தொழில் அதிபரான அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டினால் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் ஏற்கனவே வீர் என்ற மகன் பிறந்தான். அதன் பின்னர் மீண்டும் கர்ப்பம் ஆன சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு அண்மையில் காது குத்தி பெயர் சூட்டு விழா நடத்தினராம். அப்போது மகனுக்கு ” ரஜினி” என தன் தந்தையின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளார். ஆனால், இந்த விழாவில் ரஜினி கலந்துக்கொள்ளவில்லையாம். அவரது அண்ணன் சத்தியநாராயணன் கலந்துக்கொண்டதாக செய்திகள் கூறுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி