பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல… ஜெயிலர் முன்பதிவு வசூல் – மிரண்டுப்போன விஜய் – அஜித்?

Author: Shree
1 August 2023, 3:38 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

rajinikanth nelson

தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்லர் படம் வெளிநாடுகளில் முன்பதின் மூலம் ரூ 1.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் விஜய் அஜித்தின் சாம்ராஜ்யத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு ரஜினி மீண்டும் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி