ரஜினியின் சரியான முடிவு…. ஜெயிலர் பட கதை இது தான்!

Author: Shree
18 July 2023, 12:46 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அண்மையில் கூட இப்படத்தின் காவலா பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதவாது, இப்படத்தில் ஜெய்லராக உள்ளார். அப்போது ரஜினியின் ஒரு நாள் பாதுகாப்பில் ஒரு கேக்ஸ்டர் தலைவர் இருக்கிறான். தலைவனை சிறையிலிருந்து இருந்து மீட்க கேங்ஸ்டர் கும்பல் முயல்கிறது.

ஆனால் ரஜினியை தாண்டி அவர்களால் வெளியில் எடுக்கவே முடியாது என்பதை சுதாரித்துக்கொண்டு ரஜினியை வைத்தே தலைவனை எப்படி எடுக்கிறார்கள் என்பது தான் ஹைலைட். இதனிடையே பிளாஸ்பேக் ஸ்டோரீஸ் உள்ளது. மேலும் சிறைச்சாலையில் ஜெயிலராக நடிக்கும் ரஜினிகாந்த், அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கூடவே இப்படத்தின் ரஜினியின் பேன் மூமென்ட்ஸ் நிறைய இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!