15 நாள் கூட ஆகல… அதுக்குள்ளயா : வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2024, 10:42 am
பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் வெளியான சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏராமளான நட்சத்திரங்கள், ஞானவேல் படம் என பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
ஆனால் ஞானவேலின் கதை ஓகே, ரஜினிக்காக கமர்ஷியலாக மாற்றப்பட்டுள்ளதாக கலலையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படியுங்க: பிரம்மாண்டமாக நடந்த நடிகரின் 70-வது திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!
முதல் 4 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. ஆனால் அதற்கு பின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ₹325 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஒரு சூப்பர் ஸ்டா படம் 12வது நாளில் வெறும் ₹5 கோடிகளுக்குள் வசூல் செய்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிரிச்சி. அதைவிட படம் தயாரித்த லைகா நிறுவனத்துக்கு இது மற்றொரு அடியாகவே பார்க்கப்படுகிறது.