கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ராஜ்கிரணை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட அவரின் வளர்ப்பு மகள் காதல் கணவரை பிரிந்துள்ளார். பின்னர் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் Daddy என வீடியோ வெளியிட்டு கதறி இருந்தார்.
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், முனீஸ் ராஜாவை பிரிந்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவை அவர் மிரட்டி வருவதாகவும், இதற்கு காரணம் ஜீனத் பிரியாவின் பிறப்பு ரகசியம் தான் என்றும் கூறப்படுகிறது. தற்போது, ராஜ்கிரண் தத்தெடுத்த ஜீனத் பிரியா யார் என்று உண்மை ரகசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, ஜீனத் பிரியாவின் உண்மையான தாய் லட்சுமி பார்வதி என்றும், அவர் ஆந்திராவில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் நடிகருமான என் டி ராமாராவ்வை 1993இல் லட்சுமி பார்வதி பேராசிரியராக இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய, 38 வயது இருக்கும் போது 70 வயதை கடந்த என் டி ராமாராவ்வை திருமணம் செய்திருக்கிறார். என்.டி.ஆரின் முதல் மனைவி பிள்ளைகளுக்கு லட்சுமியை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் தன் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க முடியாது என்ற பயம் வந்துள்ளது. அதனால், தன்னுடைய நண்பரான நடிகர் ராஜ்கிரனுக்கு தன் மகளை வளர்ப்பு மகளாக்கி இருக்கிறார் லட்சுமி பார்வதி.
இந்த ரகசியத்தை வெளியிட்டு விடுவேன் என்று கூறி தற்போது, முனீஸ் ராஜா மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த, உண்மையை ஜீனத் பிரியா அல்லது ராஜ்கிரண் கூறினால் மட்டுமே என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியவரும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.