என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி என்றென்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ராஜ்கிரண். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அரண்மனைக்கிளி திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடித்த ராஜ்கிரண் அவர்கள் தொடர்ந்து எல்லாமே என் ராசாதான் திரைப்படத்தையும் இயக்கி நடித்தார்.
கதாநாயகனாக மட்டுமல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களையும் ஏற்று மிக சிறப்பாக நடிக்கும் ராஜ்கிரண் அவர்கள் முரளியின் வீரத்தாலாட்டு, சூர்யாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி&தவமாய் தவமிருந்து, சிலம்பரசனின் கோவில், அஜித் குமாரின் கிரீடம், லாரன்ஸின் முனி, தளபதி விஜயின் காவலன், தனுஷின் வேங்கை & பா.பாண்டி, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், கார்த்தியின் கொம்பன் மற்றும் விருமன் உள்ளிட்ட படங்களில் மிரட்டலாக நடித்திருந்தார்.
இந்த வரிசையில் அடுத்ததாக களவாணி & வாகை சூடவா படங்களின் இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து பட்டத்து அரசன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார்.
லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
ஒருநாள் கிரீடம் படப்பிடிப்பில் ஷாட் முடிந்ததும் அஜித் உட்காராமல் நடந்து கொண்டே இருந்துள்ளார். அதற்கான அர்த்தம் முதலில் தெரியாமல் இருந்தது, அதன் பிறகு தான் அவர் வலியால் அங்கும் இங்கும் நடத்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே நான் அவரிடம் ஓய்வு எடுத்து கொள்ளாமே என கூறினேன்.
அதற்கு அவர் நீங்கள் என் கூடவே இருப்பதால் உங்களுக்கு என் நிலைமை தெரியும். ஆனால் ப்ரொடியூசர் அவர்கள் சென்னையில் இருப்பதால் அவரிடம் எப்படி நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ப்ரொடியூசர் என்னை நேரில் பார்த்திருந்தால் என்னை இரண்டு நாள் கூட ஓய்வு எடுக்க சொல்லிருப்பார். ஆனால் என்னால் முடியும் பார்த்து கொள்ளலாம் என நெகிழ்ச்சியாக கூறியதை கேட்டு ராஜ்கிரண் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.
அதேபோல் படக்காட்சியில் அஜித்தை அடிக்க கையே தூக்க முடியவில்லை எனவும், வலியில துடிச்சாரு அவ்வளவு வலியிலும் அஜித் படப்பிடிப்பில் அசராது நடித்ததை பார்த்த ராஜ்கிரண் கண்கலங்கி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் ராஜ்கிரண் தமிழ் திரையுலகிலேயே முதல்முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நபர் தான் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் “சென்னைக்கு 16 வயதில் வேலை தேடி வந்த பொழுது 4 ரூபாய் 50 காசுகள் எனது முதல் சம்பளமாக இருந்தது. அதன் பிறகு 150 ரூபாய் சம்பளமாக இருந்தது. தற்போது ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் எனது சம்பளம் என நிர்ணயத்துள்ளனர்” என ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.