கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.
கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்ற ராஜ்கிரண் வில்லன் வேடத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.
எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரை அணுகியும் அது மட்டும் முடியவே முடியாது என கறாராக கூறிவிட்டாராம். காரணம் மக்கள் மத்தியில் கெட்டவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி தற்போது வரை வில்லன் வேடங்களை மறுத்து வருகிறார். கடன் கழுத்தை நெரித்து மாச மாசம் லட்ச கணக்கில் வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் இவருக்கு எதுக்கு இந்த வறட்டு கெளரவம்? என கோலிவுட்டில் அவரை பலர் விமர்சித்து முணுமுணுத்தார்களாம்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
This website uses cookies.