தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில், பிரபல நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா குறித்து பேசியுள்ளார். அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான “என் ராசாவின் மனசிலே” படத்தில் ராஜ் கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அப்போது மீனாவின் வயது 15 தான்.
என் ராசாவின் மனசிலே படத்திற்கு கதாநாயகி தேடிட்டு இருந்தபோது ஒரு வார பத்திரிக்கையில், மீனாவோட போட்டோவை பார்த்தோம். அத பாத்துட்டு இந்த பொண்ணு படத்துக்கு கதாநாயகிய பொருத்தமாக இருப்பாங்களான்னு கஸ்தூரிராஜா கிட்ட சொன்னேன். அந்த பொண்ணு யாரு என்னன்னு விசாரிச்சுட்டு போய் பேசுங்க அப்படின்னு சொன்னதும், கஸ்தூரிராஜா என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… இந்த பொண்ணு எப்படி சார் அப்படின்னு கேட்டார்.
அந்த சோலையம்மா கதாபாத்திரத்தில் அந்த பயந்த சுபாவம் அதுக்கு மீனாதான் பொருத்தமா இருப்பாங்க நீங்க மீனா கிட்ட பேசுங்க… அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த படத்துல சோலையம்மாவா மீனா வாழ்ந்ததினால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
மேலும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மீனா ஆடை மாற்றவேண்டும் என இயக்குனர் கூற நடு ரோட்டிலே காரை ஓரமாக நிப்பாட்டிவிட்டு ஆடை மாத்திட்டு வந்து நடிச்சு கொடுத்தாங்க, அப்போது இந்த கேரவன் வசதியெல்லாம் கிடையாது என ராஜ் கிரண் கூறினார்.
முன்னதாக இந்த படத்தில் நடிக்க அழைத்த போது மீனா ராஜ்கிரன் ஹீரோ என்று கூறியதும் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். அதன் பின்னர், இயக்குனர் பேசி சமாதானம் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பல கட்ட பஞ்சாயத்துக்கள் பலகட்ட அக்கப்போர்களுக்கு பின்னர் தான் அந்தப் படத்தில் மீனா நடித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.