தண்ணி காட்டிய கவுண்டமணி… வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து தனக்கு தானே சூனியம் வச்சிகிட்ட ராஜ்கிரண்!

Author: Shree
11 July 2023, 2:45 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

ராஜ்கிரண் கவுண்டமணியை பழிவாங்க தான் வடிவேலு என்ற காமெடி நடிகரை சினிமாவில் நுழைத்தாராம். ஆம், ராஜ்கிரண் படங்களில் தொடர்ந்து நடிகர் கவுண்டமணி நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென கவுண்டமணியின் சில நடவடிக்கை பிடிக்காமல் போக அவருக்கு பதிலாக வேறு ஒரு நகைச்சுவை நடிகரை உருவாக்கினால் என்ன என்று நினைத்து கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த வடிவேலுவின் திறமை பார்த்து வியந்து கவுண்டமணியின் கெரியரை காலி செய்ய இவன் தான் சரியானவன் என முடிவெடுத்து அவரை நடிக்க வைத்தாராம்.

அவரது பிரம்மாதமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்க தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்துள்ளார் ராஜ்கிரண். நடிப்பு மட்டும் அல்லாது, இளையராஜாவிடம் வடிவேலுவை கூட்டிச்சென்று கிராமத்து பாடல் எல்லாம் நன்றாக இவன் பாடுவான் என்று கூறி பாடவும் வாய்ப்புகளையும் வாங்கிக்கொடுத்து பின்னணி பாடகராக்கி அழகு பார்த்துள்ளார். ஆனால் பின்னாளில் வடிவேலு வளர்ச்சி அடைந்து ராஜ்கிரனிடமே வேலை காட்ட தற்போது இருவரும் பேச்சுவார்த்தையை இல்லாமல் இருந்து வருகிறார்கள். ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த சமயத்தில் வடிவேலுவிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் அதைக்கூட சொல்லிக்காட்டி வடிவேலு இழிவுபடுத்தினாராம்.

  • Shivrajkumar Health Updateநடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
  • Views: - 749

    10

    7