ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!

Author: Selvan
20 December 2024, 9:54 pm

பாலிவுட் தயாரிப்பாளருடன் ராஜ்குமார் பெரியசாமி ஒப்பந்தம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்தது.

சிவகார்த்திகேயன் சினிமா கெரியரில் இதுவரை இல்லாத வசூலை அள்ளியது.இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார்.

Rajkumar Periyasamy Bollywood Debut

மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து,ஒரு உண்மை சம்பவத்தை தழுவி,தத்ரூபமாக எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது OTT-யில் வெளியாகியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன,தன்னுடைய சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

இதையும் படியுங்க: அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!

அதே மாதிரி இயக்குனர் பெரியசாமியும் அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார்.நடிகர் தனுஷை வைத்து அடுத்த படம் பண்ண போவதாக தெரிவித்திருந்த நிலையில்,தற்போது பாலிவுட்டில் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமரன் படத்தை பார்த்த பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் ராஜ்குமார் பெரியசாமியை ஹிந்தி படம் இயக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். பான் இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது என்றும் 2025ல் படம் சம்மந்தமான வேலைகள் தொடங்கும் என்ற தகவல் வந்துள்ளது.

Bhushan Kumar Hindi Film

இப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu