ரசிகர்கள் செய்த வேண்டாத வேலை.. போன் போட்டு எச்சரித்த ரஜினிகாந்த்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2024, 12:00 pm

டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு மதுரை ரஜினி ரசிகர்கள் ரஜினியின் படத்துடன் சேர்த்து அ.தி.மு.க.வின் தலைவர்களான ஜெயலலிதா எம்ஜிஆர் மற்றும் அறிஞர் அண்ணா காமராஜர் காந்தி ஆகிய தலைவர்களின் படங்களையும் சேர்த்து வைத்து இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் அடித்து மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டி இருந்தார்கள்

மேலும் அந்த போஸ்டர்களை மையமாக வைத்து பல செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களில் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு விழாவில் இரட்டை இலை ஒரு பிரம்மாஸ்திரம் என பேசியதை சுட்டிக்காட்டி ரஜினியின் அடுத்த அரசியல் நகர்வு அதிமுகவை மையப்படுத்தி இருக்குமோ என்ற விதமாக செய்திகள் வெளிவந்தது

இதையும் படியுங்க: எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சம்பத் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த போஸ்டரை அடித்த ரஜினி ரசிகர்களிடம் யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. இது போன்ற போஸ்டர்களை எல்லாம் இனிமேல் ஒட்டக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது

Rajni call the Fans and Warning

அந்த அறிவுறுத்தலை தொடர்ந்து மதுரை ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே ஒட்டி இருந்த போஸ்டர்களை மறைக்கும் விதமாக புதிய போஸ்டர் வடிவமைத்து பிரசுரம் செய்து அந்த புதிய போஸ்டரை வைத்து பழைய போஸ்டரை மறைத்து ஒட்டி வருகிறார்கள்

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?