பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ எடுத்த அதிரடி முடிவு..!

Author: Rajesh
1 February 2022, 12:40 pm

பிக் பாஸ் 5 வது சீசனில் இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர் நடந்து முடிந்த, சீசனில் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ்சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர்.

இதனிடையே, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு ராஜூவுக்கு கிடைத்தது. கதைப்படி, . ராஜூ வெளிநாடு சென்றுவிட்டார் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவெடுத்துள்ளதாகவும், திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் அதனை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!