கல்யாணத்தை நிறுத்தி காதலனை விட்டுச்சென்ற ராஷ்மிகா… இன்னும் பைத்தியமாக காதலிக்கும் ரக்ஷித் ஷெட்டி!

Author: Shree
27 September 2023, 11:50 am

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். காரணம் அந்த சமயத்தில் தான் கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதனால் இந்த சமயத்தில் திருமணம் செய்தால் கெரியர் வீணாகிவிடும் என கருத்தில் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டார் .

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

rashmika mandanna -updatenews360

இந்நிலையில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிகை ராஷ்மிகா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நானும் ராஷ்மிகாவும் எப்போதும் போலவே தான் பேசிக்கொள்கிறோம். இப்போவும் நாங்க மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அவரவர் படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டார்.

அதனால் தான் தற்போது நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்” அவரது கனவு , லட்சியத்திற்காக சிலவற்றை இழந்து கடுமையாக முயற்சி செய்தார். அது அவருக்கு பலன் அளித்துள்ளது என பெருமையாக பேசியுள்ளார். தன்னை விட்டுச்சென்ற பிறகும் ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர், அவர் இன்னும் ராஷ்மிகா மீது அதே காதலோடு தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 615

    0

    0