தகாத உறவில் ரக்ஷிதா? எல்லாத்துக்கும் காரணம் இந்த நபர் தான் – தினேஷ் பகிர் குற்றச்சாட்டு!

Author: Shree
26 June 2023, 3:46 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

rakshitha

இதனிடையே ரட்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

Rachitha-updatenews360-1

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில், போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதாவிற்கு வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்….

இது குறித்து விளக்கம் அளித்த தினேஷ் , எங்களது இருவரின் போனையும் வாங்கி போலீசார் விசாரித்தார்கள். அப்போது நீ சொன்னது போன்று எந்த ஆபாச மெசேஜும் , மிரட்டலும் இல்லையேமா என அவர்களே கேட்டார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று சாதாரணமாக கேஸ் போட்டால் எந்த கேசும் எடுபடாது. அதனால் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள், ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்கள், மிரட்டல் விடுகிறார்கள் இப்படி ஏதேனும் போட்டால் தான் கேஸ் சீக்கிரமாக எடுப்பாங்க என ரக்ஷிதாவுக்கு அவரது வழக்கறிஞ்சர் சொல்லியிருக்கிறார் அதை அவர் அப்படி செய்துவிட்டார்.

இத்தனை நாள் அவருடன் என்றாவது பழையபடி வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால். அதெல்லாம் நேற்று அவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளில் முடிந்துவிட்டது. அதாவது நான் பணத்தை கேட்டேன், ஆபாசமாக பேசினேன், மிரட்டினேன் இதெல்லாம் முற்றிலும் போய். இவ்வளவு நடந்தப்பிறகும் எனக்கு அவருடன் வாழவே விருப்பம் இல்லை அவர் விவகாரத்து செய்துக்கொள்ளலாம் நான் தரலாமா கையெழுத்து போட்டு தருகிறேன் என கோபமாக ரக்ஷிதா உடனான உறவை முறித்துக்கொண்டார் தினேஷ்.

எங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரிவிற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, நான் வாட்ஸ் அப்பில் உரையாடிய சாட்டை நீங்களே பாருங்கள். இதையெல்லாம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரே பார்த்துட்டாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரச்சிதாவுக்கு கிடைத்த சில புதிய நட்பால் அவர் தவறான பாதையில் செல்கிறார்.

Rakshitha 1- updatenews360

அவர்களின் தூண்டுதலாலேயே ரச்சிதா இப்படி நடந்து கொள்கிறார். மேலும் அந்த நடிகையின் அண்ணன் தான் ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்த போது கூடவே இருந்தார். எனவே எங்கள் இருவரும் பிரச்சனையாக இருப்பது அந்த மூன்றாவது நபர் தான். எங்கள் குடும்பத்தில் 10,15 முறை பேசிட்டாங்க. பிக் பாஸுக்கு பின் வெளியில் வந்த பின்னராவது சரியாகிடும்னு நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ரச்சிதாவுக்கு விருப்பம் இருந்தால் விவாகரத்து கொடுத்து விலகிவிடுகிறேன் என உருக்கமாக பேசினார். இதையடுத்து அந்த நபர் யார்? அவருக்கு ரக்ஷிதாவுக்கும் என்ன உறவு ? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 976

    3

    4