அடக்கடவுளே..!சிம்பு பட நடிகையா இவுங்க..வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
Author: Selvan21 February 2025, 1:03 pm
ஆளே அடையாளம் தெரியாமல் போன நடிகை ரக்ஷிதா
தமிழ் சினிமாவில் சிம்பு,விஜய் ஆகியோருடன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ரக்ஷிதாவின் தற்போதைய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்க: அதிமுகவில் அஜித்துக்கு காத்திருந்த பொறுப்பு : ஜெயலலிதா போட்ட மாஸ் பிளான்!
கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த அப்பு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் ரக்ஷிதா,அதன் பிறகு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார்.இந்த படத்தில் இவருடைய அழகாலும் கவர்ச்சியான நடனத்தின் மூலமும் மிகவும் பிரபலம் அடைந்தார்,அடுத்ததாக விஜயின் மதுர படத்தில் நடித்தார்.
அதன் பிறகு சினிமாவிற்கு முட்டுக்கட்டை போட்ட இவர் 2007 ஆம் ஆண்டு கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்தார்.சினிமாவில் நடிக்கும் வரை தன்னுடைய உடலை பிட் ஆக வைத்த ரக்ஷிதா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய உடலை கவனிக்காமல் ,ரொம்ப குண்டாக மாறினார்,இதனால் அறுவைசிகிச்சை மூலம் எடையை குறைக்க முயற்சி செய்த போது,இவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதால்,உடல் எடை கூடினால் கூடி விட்டு போகட்டும் என தன்னுடைய அன்றாட வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.
அடையாளமே
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) February 19, 2025
தெரியவில்லை🥺🥺🥺 pic.twitter.com/rlimI5nhgW
இந்த நிலையில் இணையத்தில் தற்போது ரக்ஷிதாவின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.அதில் சிம்பு கூட நடித்த ரக்ஷிதாவா இப்படி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து அந்த வீடீயோவை வைரல் ஆக்கி வருகின்றனர்.