பிக்பாஸ் நண்பருடன் அப்படி ஒரு உறவு… கணவரை பிரிந்து கண்டமேனிக்கு காட்டும் ரக்ஷிதா!

Author: Shree
5 August 2023, 12:06 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ரக்ஷிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேசை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில், போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதாவிற்கு வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் தினேஷ் அப்படி எந்த ஒரு மிரட்டலும், ஆபாச மெசேஜும் அனுப்பவில்லை என்பது பின்னர் தான் தெரியவந்தது. தினேஷ் மீது பழிபோட்டு அவரை கெட்டவராக சித்தரித்து பின்னர் அதற்காக தான் அவரை பிரிந்தேன் என கூறலாம் என திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார் என நெட்டிசன்ஸ் ரக்ஷிதாவை விமர்சித்தனர்.

இந்நிலையில் கணவரை பிரிந்த பின்னர் ரக்ஷிதா மகாலக்ஷ்மி மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்து வருவது அவரது இன்ஸ்டாவை பார்த்தாலே தெரியும். முன்பை விட இப்போது அதிக கவர்ச்சி காட்டி தாராளமாக இருந்து வருகிறார். தற்ப்போது ஜன்னல் வச்ச ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக சேலை உடுத்தி எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை பேதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் அவர் பிக்பாஸ் நண்பர் ஒருவருடன் நட்பு முறையில் நெருக்கமாக பழகி வருவது தெரியவந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1196

    64

    30