பிரிந்த கணவர் பிக்பாஸ் வீட்டில்… ரக்ஷிதா போட்ட எமோஷ்னல் பதிவு – ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது.

அந்த பிரச்சனையில் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலக்ஷ்மிக்கு மேலும், ஒரு இடி விழுந்தது. ஆம், சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகை ரச்சிதாவின் அப்பா திடீரென காலமாகிவிட்டா ர். இந்த தகவலை கேட்டு திரை நட்சத்திரங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர்,

இப்படியான நேரத்தில் ரக்ஷிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் ரக்ஷிதா உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது, அப்பாவை பிரிந்து 11 வது நாள் சடங்கில் அப்பாவின் புகைப்படத்திற்கு அருகில் நின்று அம்மாவின் கையை இறுக்கமாக பிடித்து ” எனக்கு நீ உனக்கு நான் ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரக்ஷிதாவின் இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆறுதல் கூறி வருகின்றனர்.

Ramya Shree

Recent Posts

குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…

20 minutes ago

பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!

நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…

1 hour ago

ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…

2 hours ago

சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…

2 hours ago

லிப்டில் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. எல்லை மீறிய வாலிபர் எஸ்கேப் : சென்னையில் ஷாக்!

சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…

3 hours ago

பாலியல் வன்கெடுமைக்கு பலியான 80 வயது மூதாட்டி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…

3 hours ago

This website uses cookies.