சீரியல் நடிகை ரக்ஷிதாவின் அப்பா திடீர் மரணம்!

Author: Shree
20 October 2023, 4:35 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது.

அந்த பிரச்சனையில் இருந்து மீண்டும் வந்து தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலக்ஷ்மிக்கு மேலும், ஒரு இடி விழுந்துள்ளது. ஆம், பெங்களூரில் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ரச்சிதாவின் அப்பா இன்று காலை திடீரென காலமாகியுள்ளார். இந்த தகவலை கேட்டு திரை நட்சத்திரங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu