வைரத்தில் தாலி கட்டிய கணவர்… ஹனிமூன் என்ற பேச்சுக்கே இடமில்லையாம்!

Author: Rajesh
24 February 2024, 9:05 pm

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.

இதனிடையே இவர் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானி என்பவரை சில ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் இந்த ஜோடியின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் வைரலாகியது.

rakul preet singh -updatenews360

பல கோடி செலவில் நடத்தப்பட்ட இத்திருமணத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கணவர் ஜாக்கி பாக்னானி வைரத்தில் தாலி காட்டினாராம். பொதுவாக தங்கத்தில் தாலி கட்டும் நிலையில் தன் மனைவிக்கு ஜாக்கி பாக்னானி வைரத்தில் தாலி கட்டியிருப்பதை பாலிவுட்டில் பெருமையாக பேசி வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாரிப்பதில் பிசியாக இருந்து வரும் ஜாக்கி பாக்னானி ஹனிமூன் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறிவிட்டாராம். இதை கேட்ட நெட்டிசன்ஸ் ஐயோ… பாவம் ரகுல் ப்ரீத் சிங் நிலைமை இப்படியாகிப்போச்சே என கூறி வருகிறார்கள்.

  • Vijay Thalapathy 69 movie updates நடிகர் விஜய்க்கே இப்படி ஒரு நிலைமையா…தளபதி 69-க்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…!
  • Views: - 249

    0

    0