வெயிட்டான பார்ட்டியை கல்யாணம் செய்த ரகுல் ப்ரீத் சிங்.. கணவர் இந்த அளவுக்கு பணக்காரரா..!

Author: Vignesh
22 February 2024, 12:06 pm

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.

இதனிடையே இவர் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானி என்பவரை சில ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில், இந்த ஜோடியின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் வைரலானது.

ரகுல் ப்ரீத் சிங் அணிந்துள்ள திருமண உடையின் விலையே 2 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தளவுக்கு ஏகப்பட்ட வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர் கழுத்தில் அணிந்துள்ள வைர நெக்லஸ் பல கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஜாக்கி பாக்னானி, பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள நடிகரும் ஆவார். தொழிலதிபராகவும் இருக்கிறார். இவரது, சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் குடும்பத்தில் ஏகப்பட்ட லக்சரி கார்கள் உள்ளன.

rakul preet singh -updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 291

    0

    0